கபாலி: மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து

Last Updated : Jun 16, 2016, 02:10 PM IST
கபாலி: மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து  title=

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள கபாலி படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் ஒரு விருந்து ரசிகர்களுக்காக, இந்த பாடல்களின் டீசரை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அது நிச்சயம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று அவர் தாணு ட்வீட் செய்துள்ளார்.

 

 

Trending News