நான் 3ஆம் க்ளாஸு நீ 8ஆம் க்ளாஸு - கமலை பார்த்து ஆச்சரியப்பட்ட சிவாஜி

என்னைவிட அதிகம் படித்தவன் நீ. நான் மூன்றாம் க்ளாஸு நீ எட்டாம் க்ளாஸு என தன்னிடம் சிவாஜி கூறியதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 30, 2022, 04:33 PM IST
  • கமலிடம் ஆச்சரியப்பட்ட சிவாஜி கணேசன்
  • ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது விக்ரம் படம்
  • சிவாஜியைவிட அதிகம் படித்த கமல் ஹாசன்
நான் 3ஆம் க்ளாஸு நீ 8ஆம் க்ளாஸு - கமலை பார்த்து ஆச்சரியப்பட்ட சிவாஜி title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூன் 3ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

சமீபத்தில் படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் பஞ்ச தந்திரம் படத்தில் நடித்தவர்களை வைத்து  படத்தின் புதிய ப்ரோமோ சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்துவிட்டார் என புகழ்ந்து தள்ளினர்.

படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம்தான் விக்ரம் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என கமல் ஹாசனும் கூறியிருந்தார். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் படத்தில் இருப்பதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்காக அதிகரித்துள்ளது.

Rajini Kamal

இதனையடுத்து படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளன. மலேசியா, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்த ப்ரோமோஷ் நிகழ்ச்சியில் கமலும் பங்கேற்றிருக்கிறார். நேற்று ரஜினிகாந்த்தையும் அவர் சந்தித்தார்.

மேலும் படிக்க | வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்

இந்நிலையில் பட ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கமல் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துவருகிறார்.

Kamal

அந்தவகையில் கமல் ஹாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், கமலிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், உங்களுக்கு எத்தனை மொழிகள் என தெரியும் கேட்டார். அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், "இந்தி, தெலுங்கும்,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை எனக்கு எழுத படிக்க தெரியாது.

தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்து அட்ஜஸ்ட் செய்துகொண்டிருக்கிறேன். படித்தால்தான் வெல்ல முடியும் என்பதில்லை. இளையராஜா பிஹெச்.டி முடித்துவிட்டா இசையமைக்க வந்தார்.

மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?

சிவாஜி கணேசன் மூன்றாவது வகுப்பை தாண்டவில்லை. அவர் என்னிடம், நீ என்னைவிட அதிகம் படிச்சவன். அதான் உன்னிடம் மரியாதையாக பேசுகிறேன். நான் மூன்றா வகுப்பு நீ எட்டாம் வகுப்பு என்பார்” என தெரிவித்தார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News