Kaathu Vaakula Rendu Kaadhal: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் அப்டேட் ரெடி

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 05:29 PM IST
  • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல்
  • சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது
  • காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
Kaathu Vaakula Rendu Kaadhal: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் அப்டேட் ரெடி title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த அப்டேட் ரெடி என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

ALSO READ | மனைவியாகும் நயன்தாரா.. ஆனால் கணவர் விக்னேஷ் சிவன் இல்லை..

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தை இயக்கிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்னேஷ் சிவன் அதைத்தொடர்ந்து இயக்கிய நானும் ரவுடி தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தை பல மடங்கு வசூலையும் அள்ளியது.

தற்போது மீண்டும் நானும் ரவுடி தான் கூட்டணி இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News