நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜப்பான் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. காரணம் கார்த்தி இந்த படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை எடுக்கும் ராஜு முருகன் ஒரு கமர்சியல் படத்தை எடுத்துள்ளார், இது தவிர கார்த்தி நடிப்பில் வெளியாகும் 25வது படம் ஜப்பான் ஆகும். கார்த்தி நடித்த படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஜப்பான் படத்திற்கு மிகப்பெரிய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்தி தவிர சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் மற்றும் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பிலோமீன் ராஜ் மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?
மிகப்பெரிய நகை கொள்ளையில் ஈடுபடும் கார்த்தி அந்த பணத்தை வைத்து சினிமாவில் நடிப்பது, ஜாலியாக இருப்பது என தனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் கோவையில் ஒரு நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த கொள்ளையை கார்த்தி ஆன ஜப்பான் தான் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் அவரை தேடுகின்றனர். இறுதியில் கார்த்தி போலீசில் பிடிபட்டாரா? அந்த நகைக்கடையை யார் கொள்ளையடித்தது? என்பதுதான் ஜப்பான் படத்தின் கதை. இயக்குனர் ராஜு முருகன் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த கதையை இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் முருகன் என்ற ஒரு திருடனை பற்றி தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
நகை கடையில் சுவற்றை ஓட்டை போட்டு நகைகளை கொள்ளை அடிப்பதில் திருவாரூர் முருகன் மிகப்பெரிய கெட்டிக்காரராக இருந்தார். இவரது கதாபாத்திரத்தை சற்று மாற்றியமைத்துள்ள, ராஜு முருகன் ஜப்பான் என்ற ஒரு புதிய அடையாளம் கொடுத்துள்ளார். வழக்கமாக சமூக கருத்துள்ள படங்களை எடுக்கும் ராஜு முருகன் இந்த முறை ஒரு கமர்சியல் படத்தை இயக்கியுள்ளார். ஜப்பான் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரமும், வசனங்களும் இதுவரை இல்லாத வகையில் புதிதாக இருந்தது. மேலும் படத்தை தனி ஒரு ஆளாக தோளில் சுமந்து சென்றுள்ளார். கார்த்தி இந்த படத்திற்காக பல இடங்களில் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்பது திரையில் தெரிகிறது. வழக்கம்போல சண்டை காட்சிகளில் அசால்டாக கையாண்டு உள்ளார் கார்த்திக்.
சுனில் மற்றும் விஜய் மில்டன் போலீஸ் அதிகாரிகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அமைச்சராக வரும் கேஎஸ் ரவிக்குமார் நன்றாக நடித்துள்ளார், அணு இமானுவேலுக்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் ஒரு நடிகையாகவே படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் நகை கொள்ளையில் தொடங்கி போலீசின் தேடுதல் வேட்டை தொடங்கும் வரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் அதே விறுவிறுப்பு படம் முடியும் வரையில் இல்லை. கார்த்தி கதாபாத்திரத்தை வைத்து மட்டுமே முழு கதையையும் சொல்லி இருக்கலாம், இடையில் மற்றொரு ஏழை குடும்பத்தின் கதையையும் இதனுடன் இணைத்துள்ளார் ராஜு முருகன். அது படத்திற்கு சம்பந்தமில்லாமல் இருந்தது, இதுவே படத்திற்கும் பின்னடைவாகவும் அமைந்துள்ளது. மேலும் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகளும் பெரிய அளவில் இருந்தது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கொஞ்சம் நன்றாக இருந்தது. காட்சிகளாக நன்றாக இருக்கும் ஜப்பான் படத்தில் திரைக்கதையிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மேலும் படிக்க | இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ