ஜெயிலர் மாஸ் வெற்றி-ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு! இதன் விலை இத்தனை கோடியா..?

Kalanithi Maran Gifts BMW Car to Jailer Rajinikanth: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் கலாநிதி மாறன், ரஜினிகாந்த்திற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2023, 03:34 PM IST
  • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • இதை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன் விலை உயர்ந்த காரை ரஜினிக்கு பரிசளித்துள்ளார்.
  • இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா..?
ஜெயிலர் மாஸ் வெற்றி-ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு! இதன் விலை இத்தனை கோடியா..?  title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருந்த படம் ஜெயிலர். ரஜினிகாந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். படம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் மழையில் நனைந்து வருகிறது. இதையொட்டி படத்தின் ஹீரோ ரஜினிக்கு கலாநிதி மாறன் புதிதாக பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். 

ஜெயிலர் திரைப்படம்:

கோலமாகவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்தை ஹீரோவாக நடிக்க வைத்து இவர் இயக்கியிருந்த படம், ஜெயிலர். இந்த படத்தில் பல திரையுலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம், மாபெறும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து கலாநிதி மாறன் ரஜினிக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். 

மேலும் படிக்க | தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜினிக்கு கார் பரிசு:

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன் ரஜினிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். ஜெயிலர் படத்தின் கலக்ஷனில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர், ரஜினிகாந்திற்கு காசோலையாக வழங்கியுள்ளார். மேலும், இரண்டு விளை உயர்ந்த கார்களை ரஜினியிடம் காண்பித்து அவரையே ஒரு காரை தேர்ந்தெடுக்க கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் BMW X7 காரை தேர்ந்தெடுத்தார். அந்த காரையே அவருக்கு பரிசாக கலாநிதி வழங்கியுள்ளார். இந்த தருணத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசனகள், “நேற்று பெரிய செக், இன்று பெரிய கார்..சூப்பர் ஸ்டார் காட்டில் மழைதான்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 

விலை எவ்வளவு..? 

இந்தியாவின் விலை உயர்ந்த கார்களுள் ஒன்று, பிஎம்டபிள்யூ. அதிலும் அந்த காரின் X7 சீரிஸ் வகை கார்கள் மிகவும் விலை அதிகமானவை. 6-8 சீட்டர் வரை கொண்டுள்ள கார்கள் இவை. இந்த வகை கார்கள், 1.22 கோடி ரூபாய் முதல் 1.52 கோடி ரூபாய் வரையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த காரும் பிஎம்டபிள்யூ X7 சீரிஸின் அதிக விலை உயர்ந்த காராக இருக்கும் என கருதப்படுகிறது. 

நெல்சனுக்கு பரிசு இருக்கா..? 

ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கும் கலாநிதி மாறன் சார்பில் பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியான ‘விக்ரம்’ படத்தின் வெற்றியின் போது லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் பரிசாக வழங்கினார். இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ படத்தின் வெற்றிக்காக மாரி செல்வராஜ்ஜிற்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார். ஜெயிலர் படம் வெற்றி பெற்ற போது ரஜினி அல்லது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நெல்சனுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அவர்களது ஆசை தற்போது நிறைவேற உள்ளது. 

ஜெயிலர் படத்தின் மொத்த வசூல்:

ஜெயிலர் திரைப்படம் 22 நாட்களை கடந்து தியேட்டரில் வெற்றி நடை போட்டு வருகிறது. படத்தின் முதல் நாள் வசூலே 50 கோடியை தாண்டியது. விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களிலும் இந்த வசூல் அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்தது. தற்போது வரை படம் 650 கோடியை தாண்டி வசூலில் அடித்து நொறுக்கி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | வெப் தொடர் நாயகனாக மாறிய நடிகர் ஷ்யாம்..! எந்த சீரிஸ் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News