Jailer Update: வெளியானது ஜெயிலர் படத்தின் தெறி வீடியோ! ரிலீஸ் எப்பாேது தெரியுமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : May 4, 2023, 06:28 PM IST
  • ஜெயிலர் படம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகிறது.
  • இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
  • படம் டார்க் ஹியூமர் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளது.
Jailer Update: வெளியானது ஜெயிலர் படத்தின் தெறி வீடியோ! ரிலீஸ் எப்பாேது தெரியுமா? title=

கோலமாலமாவு காேகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர், நெல்சன் திலீப் குமார். விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்த கைய்யோடு, சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் கமிட் ஆனார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் படத்தின் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் பெரிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. 

மாஸ் அப்டேட்!

ஜெயிலர் படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த படம், சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படக்குழு, படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் இந்தியின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகர் ரஜினி, ஸ்டைலாக காரில் இருந்து இறங்கும் காட்சி பலரை புல்லரிக்க வைக்கும் வகையில் உள்ளது. 

 

 

புது அவதாரத்தில் ரஜினி?

ஜெயிலர் படத்தில் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ரஜினியுடன் இணைந்து நடிகை தமன்னாவும் இப்படத்தில் நடிக்கிறார். இது, அவருக்கு ரஜினியுடனான முதல் படமாகும். இவர்களையடுத்து நடிகர்கள் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையால சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. 

Jailer

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்: விவேக் முதல் மனோபாலா வரை..!

“ஜெயிச்சுடு யா நெல்சா..”

நடிகர் விஜய் நடித்திருந்த பீஸ்ட் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன வகையில் செம அடி வாங்கியது. இவ்வளவு பெரிய நடிகரை வைத்து ஒரு படம் எடுக்கும் போது அதற்கு திரைக்கதை பொருத்தமானதாக இருக்க வேண்டாமா என ரசிகர்கள் நெல்சனை வசைபாடி வதைத்தனர். பீஸ்ட் படத்தின் ரிலீஸிற்கு முன்னரே, நெல்சன் சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் கை கோர்த்து விட்டார். இதனால், பீஸ்ட் படத்தை மனதில் வைத்து நெல்சனிடமிருந்து சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விடுமோ என சிலர் எண்ணினர். ஆனால் ஒரு படத்தின் தோல்விக்கு பிறகு மீண்டு வந்த நெல்சன், ஜெயிலர் படத்தினை இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்தினார். இதையடுத்து நெல்சன் குறித்து பதிவிடும் அவரது ரசிகர்கள், ‘எப்படியாச்சு ஜெயிச்சுடுயா நெல்சா..” என சூரரைப்போற்று ஊர்வசியின் டெம்ப்ளேட்டை வைத்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அவர்களது நம்பிக்கையை நெல்சன் காப்பாற்றுவாரா இல்லையா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | ஜெயிலர் VS மாவீரன்: ஒரே நாளில் ரிலீஸ்?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News