மெட்ரோ படத்தின் கதைதான் வலிமைப் படமா ? போனிகபூர், எச்.வினோத் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ படத்தின் கதையை வலிமை படக்குழுவினர் திருடிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Edited by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 11, 2022, 07:21 PM IST
  • மெட்ரோ படத்தில் இருந்து திருடப்பட்டதா வலிமை ?
  • மெட்ரோ பட தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் புகார் மனு
  • போனி கபூர், எச்.வினோத் பதில் அளிக்க செ. உயர்நீதிமன்றம் உத்தரவு
மெட்ரோ படத்தின் கதைதான் வலிமைப் படமா ? போனிகபூர், எச்.வினோத் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு  title=

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் புதிய மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘திரைப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள், மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வசதியான வாழ்வுக்காக சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல கதை வடிவடைப்பு இருக்கிறது. இதே கதைதான் வலிமை படத்தின் கதையும். மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமைப் படம் உருவாக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் மெட்ரோ படக்குழுவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | 'மெட்ரோ' படத்தின் காப்பியா 'வலிமை'? மெட்ரோ இயக்குனரின் பதில்!

இந்த புகார் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 17ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். வலிமைப் படத்துக்கு புதிதாக வந்துள்ள இந்தப் பிரச்சனையை படக்குழு எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News