விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

High Paid South Indian Actors: தென்னிந்திய திரையுலகிலும் கோலிவுட் திரையுலகிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்? இதோ முழு விவரம். 

Written by - Yuvashree | Last Updated : Oct 9, 2023, 03:53 PM IST
  • அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள்.
  • ரஜினி-விஜய் ஆகியோர் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர்.
  • நடிகர்களின் சம்பள விவரம் இதோ!
விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்? title=

தென்னிந்திய திரையுலகில், குறிப்பாக தமிழ் திரையுலகில் மக்கள் மத்தியில் பிரபலமான பல நடிகர்கள் இருக்கின்றனர். தென்ந்தியாவை தாண்டி, இந்திய அளவிலும் இவர்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. ரஜினிகாந்த் முதல் விஜய் வரை பலர் அப்படி கொண்டாடப்படும் நடிகர்களாக இருக்கின்றனர். கோலிவுட்டிலும் தென்னிந்திய திரையுலகிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்? 

1.ரஜினிகாந்த்:

ஸ்டைல், பஞ்ச் டைலாக், வசன உச்சரிப்பு என தன்னிடம் உள்ள அனைத்து விஷயங்களையும் ரசிக்கும் படி செய்பவர், ரஜினிகாந்த்.  “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட..சின்ன குழந்தையும் சொல்லும்..” என்ற தனது படத்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. இதில் நடிக்க அவர் 150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஒரு விலையுயர்ந்த காரும் பெரிய தொகை காசோலையாகவும் வழங்கப்பட்டது. அடுத்து டி.ஜே.ஞானவேல் ராஜாவின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், ஜெயிலர் படத்தை விட அதிக தொகையை இவர் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். 

2.பிரபாஸ்:

‘பெரிய பட்ஜெட் ஹீரோ’ என்ற பெயரை சமீப காலமாக பெற்றுள்ள நடிகர், பிரபாஸ். பாகுபலி, சஹோ, ஆதி புருஷ், சலார் உள்ளிட்ட இவரது படங்கள் பல கோடி செலவில் உருவானது. தற்போது கல்கி ஏடி 2898 படத்தில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். சலார் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வருகிறது. இவர் நடிக்கும் படங்களில் பாதி பட்ஜெட் இவரது சம்பளமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு 150 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறாராம். 

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் அதிகம் படித்த நாயகி யார்..? அட, இவரா..!

3.விஜய்:

நடிகர் விஜய், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சம்பள தொகையை அதிரடியாக உயர்த்தினார். இவர், லியோ படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்காக இவருக்கு 150கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

South Indian Actors

4.கமல்ஹாசன்:

ரசிகர்களால், “உலகநாயகன்” என்று அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். தனது இளமை காலத்திலேயே பாலிவுட்,டோலிவுட் என பல திரையுலகில் கலக்கிய இவர், தற்போது வரை இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக இவர், 150 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் கே-கல்கி ஏடி 2898 படத்தில் கமல்தான் வில்லன். இந்த படத்திற்கு 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் கமல், அதற்கு சம்பளமாக 120 கோடி வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர். 

5.அல்லு அர்ஜுன்:

‘புஷ்பா’ பட ஹீரோ அல்லு அர்ஜூனிற்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகராக கருதப்படுப்வர், அல்லு அர்ஜூன். இவர் நடிக்கும் படங்கள் தோல்வியை சந்திப்பதே மிகவும் அரிது என கூறப்படுகிறது. இவர், ஒரு படத்திற்காக 125 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் நடிப்பில் அடுத்து புஷ்பா:தி ரூல் படம் உருவாகி வருகிறது. இப்படம், அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News