ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் படத்தின் தலைப்பு அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 03:29 PM IST
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் படத்தின் தலைப்பு அறிவிப்பு title=

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்  ஜி.வி.பிரகாஷ். இவர் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். 

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு (GV Prakash) ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் (Gautham Vasudev Menon) இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார். 

ALSO READ | தனுஷ் ஒரு நடிகர் மட்டுமல்ல.. D43 படம் குறித்து மனம் திறந்த கார்த்திக் நரேன்

இந்த நிலையில் சற்று முன் வெற்றிமாறனின் பேஸ்புக் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அடுத்த படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்த படத்தை வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்க உள்ளார்.

ALSO READ | விஜய் சேதுபதியின் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவு!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News