சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ First Look வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Last Updated : Aug 12, 2019, 12:44 PM IST
சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ First Look வெளியானது! title=

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்படத்தை தவிர இரும்புதிரை படத்தை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்

இப்படத்திற்கு முன்னதாக எங்க வீட்டு பிள்ளை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன, ஆனால் இது எம்ஜிஆர் படத்தின் டைட்டில் என்பதால், இப்படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என்று டைட்டில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதிதிரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News