சென்னை: 'சூரரை போற்று' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யாவிற்கு இருந்த தடை நீங்கியது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' மெகா வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டன.
'சூரரைப்போற்று' படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், படத்தின் ஹிந்தி ரீமேக்கினை தயாரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
ALSO READ | Soorarai Pottru: சர்வதேச விருதுடன் சூர்யா - ஜோதிகா: வீடியோ வைரல்
' 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் ஆகியவை இணைந்து 'சூரரைப்போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கினை தயாரிக்கக் கூடாது எனவும், ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும்' தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2டி என்டர்டெய்ன்மென்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஆதாரங்களாக ஏற்றுக் கொண்டு, இந்தி ரீமேக்கிற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார்.
Big shot in the arm for @Suriya_offl's @2D_ENTPVTLTD as the Madras HC vacates the injunction granted to Sikhya Entertainment! 2D Entertainment & @Abundantia_Ent can now resume work on the Hindi remake of #SooraraiPottru #SudhaKongara @rajsekarpandian@gvprakash @nikethbommi pic.twitter.com/jqRpZXllEu
— Kaushik LM (@LMKMovieManiac) September 8, 2021
சாதாரண மக்களையும் விமானத்தில் பயணிக்க முயற்சி செய்யும் லட்சிய இளைஞனின் கதாபாத்திரத்தில் கலக்கினார் சூர்யா. பல்வேறு தடைகளையும் தாண்டி, குடும்பம், நண்பர்கள் மற்றும் விடாமுயற்சியால் தன்னுடைய லட்சியத்தை அடைகிறார் மாறா.
ஏர் டெக்கான் விமான நிறுவனர் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் (Air Deccan founder Capt. G.R. Gopinath) வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது.
"சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா (Sudha Kongara), இந்தி மொழியிலும் இயக்குநராக பணிபுரிவார். “சூரரைப் போற்று திரைப்படத்தின் கதை, கேப்டன் கோபிநாத்தின் கதை, ஒரு துணிச்சலான மற்றும் ஊக்கமளிக்கும் தொழில்முனைவோரின் கதை. 90 களின் புதிய இந்தியாவை சுருக்கமாகக் காட்டினார் அவர்" என்று சுதா கொங்கரா கூறினார்.
"இதுவரை இந்த திரைப்படம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. இந்த தனித்துவமான மற்றும் அற்புதமான கதையை இந்தியில் சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த இந்தி ரீமேக்கிற்கும் தமிழில் கிடைத்தது போன்ற வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று சுதா கொங்கரா கூறினார்.
Also Read | Drug Scandal: நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR