நான் மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்த எமிலியா கிளார்க்!

கேம் ஆஃப் திரோன் கதாநாயகி எமிலியா கிளார்க் மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 18, 2022, 03:22 PM IST
  • என் மூளையின் ஒரு சில பகுதிகள் பயன்படுத்த முடியாததாகியுள்ளது
  • இந்த நோய் உள்ள மக்களில் வெகு சிலரே நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றனர்
நான் மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்த எமிலியா கிளார்க்! title=

ஹாலிவுட் சீரிஸ் உலகத்தை முற்றிலும் திசை திருப்பி பார்வையாளர்களை அள்ளிய சில வெப் சீரிஸில் ஒன்று "கேம் ஆஃப் திரோன்ஸ்" வெப் சீரிஸ்.

அவ்வாறு லட்சக்கணக்கான இணைய வாசிகளை தன் பக்கம் ஈர்த்த கேம் ஆஃப் திரோன்ஸ் வெப் சீரிஸின் கதாப்பாத்திரங்களையும் மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். அதிலும் டெனெரிஸ் டார்கேரியன் என்ற கதாப்பாத்திரம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

ஆண் கதாபாத்திரங்களை அலறவிட்ட முக்கிய முன்னணி பாத்திரமான டெனெரிஸ் டார்கேரியன் அன்பான தலைவி, சாதுவான இளவரசி, கொடூர ராணி, அடிமைகளின் விடுவு காலம், அன்பு மனைவி என பல்வேறு முகங்களை காட்டியது.

இந்த கதாபாத்திரத்தில் நடித்த எமிலியா கிளார்க் அதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் உலக அரங்கில் நின்று பேசும் கதாபாத்திரமாக டெனெரிஸ் டார்கேரியனே இருந்தது.

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 6-ல் யார் யார்? கசிந்த போட்டியாளர்கள் பற்றிய தகவல்!

இந்நிலையில், எமிலியா கிளார்க் ஒரு தைரியமான பெண்ணாக, ஒரு பயமறியா பெண் சிங்கமாகவே அவரது ரசிகர்கள் உருவப்படுத்தி வைத்துள்ளனர். இப்படிபட்ட சூழலிலேயே எமிலியா கிளார்க் தனது உயிர் கொள்ளும் நோய் குறித்து மனம் திறந்து பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

அண்மையில் தனது நோய் குறித்து பேசிய எமிலியா கிளார்க், தனது மூளையில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பிரைன் அனியூரிஸம் (brain aneurysm) எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நோயின் தாக்கம் என்னவென்றால், மூளையின் ரத்த நாளங்கள் தளர்வடைந்து மெல்லிய சுவர்களை கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் நாளங்கள் வெடித்துவிடும். இதனால் மூளையின் உட்பாகங்களிலேயே ரத்த கசிவு ஏற்பட்டு உயிர் போகும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

2011ல் கேம் ஆஃப் திரோன் முதல் பாகத்தை நடித்து முடித்த நேரத்தில் எமிலியா மயங்கியுள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஸ்கேன் செய்து பார்க்கையில் அவரது மூளையிலுள்ள ஒரு ரத்த நாளம் வெடித்து இருப்பது தெரிய வந்தது.

அப்போது தான் முதன்முறையாக அவருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர், மூளையினுள் 2 ஆம் முறையாக ரத்த நாளம் வெடித்த நிகழ்வு 2013ல் நிகழ்ந்ததாம்.

அப்போதில் இருந்து தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் எமிலியா கிளார்க். 

மேலும், இது குறித்து பேசிய எமிலியா கிளார்க், "என் மூளையின் ஒரு சில பகுதிகள் பயன்படுத்த முடியாததாகியுள்ளது - இது குறிப்பிடத்தக்கது, சில நேரங்களில் வெளிப்படையாகப் பேசவும், எந்த விளைவுகளும் இல்லாமல் என் வாழ்க்கையை முற்றிலும் சாதாரணமாக வாழவும் முடிகிறது. நான் உண்மையில் உயிர்வாழ்கிறேன். இந்த நோய் உள்ள மக்களில் வெகு சிலரே நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றனர். அதில் நானும் ஒருவர்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஏமாத்த ஒன்னும் இல்ல சேரி மக்கள்னா கெட்ட வார்த்தைதான் - பவி டீச்சரின் சர்ச்சை பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News