என் பெயரில் மோசடி நடக்கிறது ஏமாறாதீர்கள் - குக் வித் கோமாளி புகழ்

தன் பெயரில் மோசடி நடப்பதாகவும், யாரும் ஏமாற வேண்டாம் எனவும் குக் வித் கோமாளி புகழ் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 28, 2022, 05:31 PM IST
  • புகழ் பெயரில் மோசடி
  • குக் வித் கோமாளி புகழ் பெயரில் மோசடி
  • யாரும் ஏமாற வேண்டாம் என புகழ் அறிவுறுத்தல்
என் பெயரில் மோசடி நடக்கிறது ஏமாறாதீர்கள் - குக் வித் கோமாளி புகழ் title=

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அறிமுகமானவர் புகழ்.இதனையடுத்து குக் வித் கோமாளி என்ற காமெடி நிகழ்ச்சி அதே தொலைக்காட்சியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக புகழ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் அடைந்த பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

Pugazh

சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் தன்னை வளர்த்துவிட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மறக்காத புகழ் அந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டார்.

மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எங்கு எப்போது?... வெளியான புது தகவல்

இதற்கிடையே புகழுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது."Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் என்பவர் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிலிப்பைன்ஸில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

Pugazh

ஆர்மபகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட புகழ் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சி அனைவருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. இதனாலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தோனியின் காதலி!

இந்த சூழலில் புகழ் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என பேசி பலர் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தன் பெயரில் நடக்கும் மோசடி குறித்து புகழ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என கூறி பலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். நான் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை நானே வெளியிடுவதனால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் ஃபேன்பாய் மொமண்ட் - விக்ரம் ப்ரோமோவுக்கு இணைந்த பஞ்ச தந்திர கூட்டணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News