திரைப்படங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கான காட்சி போடப்படுவதுண்டு. படத்தை பார்க்கும் பத்திரிகையாளர்கள் தங்களது விமர்சனத்தை வெளியிடுவார்கள். அந்த விமர்சனம் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் எந்த கோளாறும் இல்லை. அது எல்லை மீறும்போது பிரச்னைகள் வெடிக்கின்றன. சமீபத்தில்கூட பார்த்திபனின் இரவின் நிழல் படம் குறித்த விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறனுக்கும், பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இந்நிலையில் ப்ளூசட்டை என்ற குறும்பட விழா சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் கடுமையாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுப்பது போன்ற காட்சி இருந்தது. இதற்கு நடிகரும், தன்னை தானே பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்பவருமான பயில்வான் ரங்கநாதன் எதிர்ப்பு தெரிவித்து, “டுமையாக எழுதுவது தவறுதான் என்றாலும், நாக்கை அறுத்து தண்டிப்பது போல் எப்படி காட்சி வைக்கலாம்” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு குரல் எழுப்பினார். "நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். இயக்குனர் ஆவதற்கு 5 வருடங்கள் ஆனது. அந்த 15 வருடங்களில் ஊருக்கு கூட போகமுடியவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி அது வெளிவரும்போது கடுமையாக தாக்கி வா போ என தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால் ஒரு புது இயக்குனரின் மனம் என்ன பாடுபடும்? கடுமையான சொற்களால் தாக்கி எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் பார்த்து எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக்கூடாது" என்றார்.
மேலும் படிக்க | தளபதி விஜய்யும் அஜித்தும் ஒரே இடத்தில்? முழு விவரம்!
அதேபோல் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி பேசும்போதும் இதே கருத்தினை பதிவு செய்தார். இதனால் அங்கு இறுக்கமான சூழ்நிலை நிலவியது.
ரிவியூ பண்ணுறவங்க சொந்தக்காசுல டிக்கட் எடுத்து படம் பாருங்க. ஓசில பாக்காதீங்க - ப்ரெஸ் மீட்டில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்திய குறும்பட நடிகர்? கைதட்டி ஆமோதித்த குறும்படக்குழு. pic.twitter.com/pgoM8u9qCx
— Blue Sattai Maran (@tamiltalkies) August 15, 2022
இருவரின் கருத்துக்கும் தற்போது ஆதரவும், பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரிவியூ பண்ணுறவங்க சொந்தக்காசுல டிக்கட் எடுத்து படம் பாருங்க. ஓசில பாக்காதீங்க - ப்ரெஸ் மீட்டில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்திய குறும்பட நடிகர்? கைதட்டி ஆமோதித்த குறும்படக்குழு” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 'தளபதி 67' படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ