சிங்கமா? நரியா? எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மாஃபியா படத்தின் டீசர்

"மாஃபியா" படத்தின் டீசரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2019, 10:41 AM IST
சிங்கமா? நரியா? எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மாஃபியா படத்தின் டீசர் title=

துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், "மாஃபியா" படத்தை இயக்கி உள்ளார். கார்த்திக் நரேனுக்கு "துருவங்கள் பதினாறு" நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஆனால் நரகாசூரன் படம் பொருளாதார சிக்கல்களின் காரணமாக இன்னும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் தான் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் "மாஃபியா" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.

நேற்று மலை "மாஃபியா" படத்தின் டீசரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

Trending News