பாலா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா!

Last Updated : Feb 20, 2017, 04:19 PM IST
பாலா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா!  title=

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என தகவல் கூறப்பட்டுள்ளது. 

பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜோதிகா தற்போது நடித்துவரும் மகளிர் மட்டும் படத்தினை தொடர்ந்து, பாலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மார்ச் 1 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

Trending News