இயக்குனர் வெற்றிமாறன் (Directer Vetrimaaran) மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள "வாடிவாசல்" படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் "வாடிவாசல்" திரைப்படத்தின் டைடில் லுக் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டரில் காளையின் சின்னத்தை நாம் காணலாம். வாடிவாசல் (Vaadivasal) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும். இது மிகவும் பிரபலமான தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மையமாக வைத்து உருவாகப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் கடந்த ஆண்டு "வாடி வாசல்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
தலைப்பு மற்றும் போஸ்டரை பகிர்ந்துகொண்டு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு (Kalaipuli S Thanu), "எங்கள் வரலாறு மற்றும் துணிச்சலைக் குறிக்கும் ஒரு சின்னம், வாடிவாசல் படத்தின் போஸ்டரை முன்வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்." எனப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
A symbol that signifies our History and Bravery, I am extremely delighted and proud to present the Title look of #VaadiVaasal @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasalTitleLook pic.twitter.com/BNDob3Shsv
— Kalaippuli S Thanu (@theVcreations) July 16, 2021
இந்த படம் சி.சு.செல்லப்பா (Writer CS Chellappa) எழுதிய 'வாடிவாசல்' நாவலை வைத்தே, 'வாடிவாசல்' படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.
ALSO READ | மிரட்டல் லுக்கில் சூர்யா...பிறந்தநாள் ஸ்பெஷல்....‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Thank you for all your love!! #VaadiVaasalTitleLook @VetriMaaran @theVcreations @gvprakash @VelrajR @jacki_art #CSChellappa @kabilanchelliah #VaadiVaasal pic.twitter.com/azILsifxja
— Suriya Sivakumar (@Suriya_offl) July 16, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR