தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 10, 2020, 04:08 PM IST
தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!! title=

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுவாகும். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கை கோர்த்துள்ளனர். ஒரசாத பாடல் புகழ் விவேக் - மெர்வின் இசையில் இந்த திரைப்படத்தை சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிக்கின்றது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பட்டாஸ் படத்தின் சென்சார் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News