டிடி-யின் இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன்பு கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.

Last Updated : Dec 20, 2017, 08:30 AM IST
டிடி-யின் இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!  title=

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன்பு கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. இதனால் டிடி அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சில செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர். இதுக்குறித்து தெளிவான விளக்கம் தற்போது வரை கிடைக்கவில்லை.

Trending News