7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது தர்பார்!

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை உலக முழுவதும் சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 8, 2020, 05:14 PM IST
7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது தர்பார்! title=

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை உலக முழுவதும் சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘தர்பார்’.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை, லைகா புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் ஜனவரி 8-ஆம் தேதி அமெரிக்காவில் பிரீமியர் ஷோ திரையிடப்படுகிறது. ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தர்பார் படம் உலகம் முழுக்க 7 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. உலகம் முழுக்க 7 ஆயிரம் தியேட்டர்களிலும் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தது போல் நடித்துள்ளார். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News