ஹீரோவாக CWC புகழ்.. பூஜையுடன் தொடங்கிய 'துடிக்கிறது மீசை' படப்பிடிப்பு

யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 3, 2023, 05:11 PM IST
  • இயக்குனர் எம்.ஜே.இளன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
  • இப்படத்தின் கதாநாயகனாக புகழ் நடிக்கிறார்.
ஹீரோவாக CWC புகழ்.. பூஜையுடன் தொடங்கிய 'துடிக்கிறது மீசை' படப்பிடிப்பு title=

யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் இப் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ், முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு, மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

'துடிக்கிறது மீசை'படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஜே. இளன் பேசும்போது, "நான் இயக்குநர் எஸ்.டி.சபா அவர்களிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி தாணு அவர்களிடமும் பணியாற்றி சினிமாவில் பல துறைகள் பற்றியும் அறிந்து அனுபவம் பெற்று இருக்கிறேன்.

மேலும் படிக்க | கவின் திருமணம் செய்து கொள்ள போவது இந்த பெண்ணைத்தான்..! வெளியானது புகைப்படம்..!

படத்தின் கதை என்னவென்றால், காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்தக் கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரசியமாகக் கூறவிருக்கிறோம்.

மேலும் படிக்க | கோலிவுட் to ஹாலிவுட்..இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்-தொடர்கள்..!

இன்று இந்தத் தொடக்க விழா நடைபெற்று தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் முருகதாஸ், புகழ், மாறன், யோகிதா, வர்ஷினி, அக்ஷிதா ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பதற்கும் பிரபலமான நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

இன்றைய சினிமாவின் ஆரோக்கியமான விஷயமாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இன்று எத்தனை பெரிய நட்சத்திரங்கள் நடித்தாலும் அவை வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான, என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் புகழ்பெற்ற வசனமான "துடிக்கிறது மீசை " என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம்.இத்தலைப்பு கோபத்தைக் குறியீடாகச் சொல்கிறது.

மேலும் படிக்க | “பீஸ்ட் பாதி..பாட்ஷா மீதி..” ஜெயிலர் பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..!

இப்படத்திற்கு ஒளிப்பதிவு அசோக்குமார், இசை ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசைவாணன், சீர்காழி சிற்பி என்று சினிமா மீது பேரார்வமும் திறமையும் உள்ளவர்கள் இணைந்துள்ளார்கள்.படப்பிடிப்புக்கு நம்பிக்கையோடு புறப்படுகிறது படக்குழு" என்கிறார் இயக்குநர் எம்.ஜே. இளன்.

நடிகர் புகழ் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். இந்நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல மதிப்பையும், அன்பையும் புகழ் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் பெற்றார். இதனையடுத்து, நடிகர் அஜித் நடித்த 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உலகளவில் ட்ரெண்டாகும் ஒரே தமிழ் படம்..! ஒடிடியில் ‘மாமன்னன்’ படைத்த புதிய சாதனை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News