"நரகாசூரன்" படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; OTT தளத்தில் படம் வெளியாகிறது!

Naragasooran controversy: ஆகஸ்ட் 13 ஆம் தேதி OTT இயங்குதளமான சோனி எல்.ஐ.வி.யில் (Sony LIV) வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2021, 02:46 PM IST
"நரகாசூரன்" படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; OTT தளத்தில் படம் வெளியாகிறது! title=

Naragasooran controversy: கார்த்திக் நரேன் இயக்கிய நீண்ட காலமாக கிடப்பில் கிடைக்கும் "நரகாசூரன்" படத்தின் வெளியீட்டு சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. பல்வேறு காரணங்கள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக, படத்தின் வெளியீடு பல மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பைனான்ஸ் சிக்கல் பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் OTT தளத்தில் படம் வெளியிடப்படும் எனத் தகவல் வந்துள்ளது. 

இயக்குனர் கார்த்திக் நரேனின் (Karthick Naren) சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படமான "துருவங்கள் 16" படத்திற்குப் பிறகு, அவர் "நரகாசூரன்" படத்தை இயக்கினார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிவுள்ள இப்படத்தில் அரவிந்த் சுவாமி, இந்திரஜித், ஸ்ரியா சரண், சுந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். 

இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படாது. ஆனால் ஆகஸ்ட் 13 ஆம் தேதி OTT இயங்குதளமான சோனி எல்.ஐ.வி.யில் (Sony LIV) வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | ‘நரகாசூரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடைசியாக வெளியான "மாஃபியா: அத்தியாயம் 1" (Mafia: Chapter 1) எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். 

இளம் இயக்குரான கார்த்திக் தற்போது தனுஷ் (Actor Dhanush) நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இன்ஹ்ட படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது "D43" என்று குறிப்பிடப்படுகிறது. இதில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

ALSO READ | டிவிட்டரில் தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News