’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியுள்ளார்.
பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்க, இப்படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார்.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற எழுத்தில் தொடங்குவதால், 'ஆர்ஆர்ஆர்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்து வருகிறது.
#NewsBreak: And here comes the first look of #Baahubali director SS Rajamouli’s next film #RRR... Mark the release date: 30 July 2020... In #Hindi, #Telugu, #Tamil, #Malayalam and other Indian languages. pic.twitter.com/0ahr5hQYX1
— taran adarsh (@taran_adarsh) March 14, 2019
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராஜமௌலி,
என்னக்கு எல்லாவற்றையும் பிரம்மாண்டமாகத்தான் இருக்க வேண்டும். அதேபோல் இந்தப் படமும் பிரம்மாண்டமாகத்தான் எடுக்கப்படுகிறது. இரண்டு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களாக இருக்கும்போது உறுதுணைக் கதாபாத்திரங்களிலும் பிரபல நடிகர்கள் தேவைப்பட்டார்கள். பாலிவுட் நட்சத்திரம் அஜய் தேவ்கன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அலியா பட் ராம் சரணின் ஜோடியாக நடிக்கிறார். டெய்ஸி எட்கார் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகை ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு முதுகெலும்பாக இருக்கும்.
என்று ராஜமௌலி குறிப்பிட்டார்.