தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? - அடுத்தடுத்து அப்டேட்!

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தில், நடிகர் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2022, 09:39 AM IST
  • விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
  • தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • அதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளது.
தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? - அடுத்தடுத்து அப்டேட்! title=

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது 'வாரிசு' படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  

கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது, அதேபோல வாரிசு படமும் நல்ல வசூல் மழையை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வாரிசு படத்தால் சிக்கித்தவிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு!

மேலும் வரும் பொங்கலுக்கு, விஜய்யின் 'வாரிசு' படமும், அஜித்தின் 'துணிவு' படமும் வெளியாக உள்ளன. 'ஜில்லா' - 'வீரம்' படங்களுக்கு பின், தற்போது இருவரும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட உள்ளனர். 'வாரிசு' படத்தை தொடர்ந்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

Thalapathy 67

'தளபதி 67' என அழைக்கப்படும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

'தளபதி 67' திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் - விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, வரவேற்பையும் பெற்றிருந்தார். 

அதேபோல, விஷாலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது விஜய்க்கு நண்பராக நடிக்க உள்ளாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே, லோகேஷ் - விஜய் கூட்டணி வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ஏகோபித்த வெற்றியை பெற்ற நிலையில், இந்த கூட்டணியின் இரண்டாம் படம் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. லோகேஷின் 'கைதி' - 'விக்ரம்' பட உலகை (LCU - Lokesh Cinematic Universe) அடிப்படையாக வைத்து, தளபதி 67 உருவாகிறதா அல்லது அவற்றுக்கு தொடர்பற்ற வேறு கதைக்களத்தில் வருகிறதா என்பதுதான் டிசம்பரில் நமக்காக காத்திருக்கும் அப்டேட் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்த கொசு பேட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News