பிக்பாஸ் சீசன் 7... இவர்கள் ஏற்கெனவே காதலர்களா? - அப்போ இனி வீட்டில் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!

Bigg Boss Season 7: பிக்பாஸ் சீசன் 7 தொடரின் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 1, 2023, 09:59 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் தொடங்கியது.
  • இதில் பல போட்டியாளர்கள் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள்தான்.
  • இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7... இவர்கள் ஏற்கெனவே காதலர்களா? - அப்போ இனி வீட்டில் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ! title=

Bigg Boss Season 7, Raveena And Manichandra: விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பாஸ் சீசன் 7  (Bigg Boss Season 7) தொடர் இன்று முதல் தொடங்கி உள்ளது. இனி அடுத்த 100 நாள்களும் வீட்டில், பொது இடத்தில், சமூக வலைதளங்களில், பேருந்தில், ரயிலில் என பார்க்கும் இடம் எல்லாம் பிக்பாஸ் குறித்த பேச்சாகவே இருக்கும். இந்த சீசனில் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பல மாற்றங்களும் இருக்கும் என தெரிகிறது.

அந்த 18 பேர்...

குறிப்பாக, நடைபெறும் பிக்பாஸ் சீசன் 7  (Bigg Boss Season 7) நிகழ்ச்சியில் பெரும்பாலான போட்டியாளர்கள் 35 வயதிற்குள்ளான இளைஞர்களாகவே இருக்கின்றனர். இது போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்குவதற்காக செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 100 நாள்கள் தாக்குபிடித்து, இறுதிப்போட்டியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத்தொகையாக வழக்கம்போல் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். 

லவ் டுடே படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்த அக்ஷயா உதயகுமார், ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், எழுத்தாளர் பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் (மலேசியா வாசுதேவன் மகன்), கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர். 

மேலும் படிக்க | முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்...கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!

ரவீணா - மணிசந்திரா

இப்படி இளைஞர்கள் படையே பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில், இந்த சீசனின் முதல் எபிசோட் இன்று ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகமான நிலையில், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வந்தார். தொடர்ந்து, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, பிரதீப் ஆண்டனி,  மணி சந்திரா போன்றோர் அடுத்தடுத்து வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் வீட்டிற்குள் நுழையும் ஒவ்வொரு போட்டியாளர்களும், கேப்டன்ஸி டாஸ்கில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள மணி சந்திராவுக்கும் (Manichandra), ரவீணாவுக்கும் (Raveena) இடையே ஏற்கெனவே நல்ல பழக்கம் இருப்பது நிகழ்ச்சி பார்க்கும்போதே தெரிந்தது. மணிசந்திரா உள்ளே நுழைந்தவுடன் ரவீணா குடுகுடுவென நடந்துச்சென்று, மணிசந்திராவை வரவேற்றதும், இத எதிர்பார்க்கல என மணிசந்திராவை ரவீணாவை நோக்கியும் கூறினார். இதன்மூலம், இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் உள்ளதாக தெரிந்தது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raveen (@im_raveena_daha)

ரீல்ஸ்கள் பல...

ஆனால், இவர்கள் காதல் ஜோடிகளாக சுற்றியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் அடிப்படத் தொடங்கியது. அப்போது, ரவீணாவின் இன்ஸ்டாகிராமை திறந்துபார்க்கையில் மணிசந்திராவுடன் எடுத்த புகைப்படங்கள் சில இருந்தன. அதில் ஒரு பதிவில், மணிசந்திராவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த பதிவு அவருக்கு இடையேயான நெருக்கத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. இருவரும் நடனக் கலைஞர்கள் ஆவார்கள். இவர்கள் இணைந்து பல நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளனர். 

அப்படி ஒரு நிகழ்வில், இவர்கள் நடனமாடிய வீடியோவும் வைரலாகி உள்ளது. இவர்கள் காதலர்களா என உறுதியாகாத நிலையில், இவர்கள் மிகவும் நெருக்கமானவர்களாகவே தெரிகின்றனர். மணிசந்திரா மற்றும் ரவீணா ஆகியோரின் சமூக வலைதளங்களின் பக்கங்களில் இருவரும் சேர்ந்து செய்த பல ரீல்ஸ்களையும் காண முடிகிறது. எனவே, வரும் நாள்கள் இருவருக்கும் இடையயான உறவு பிக்பாஸ் ஹவுஸில் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு நாம் காத்திருக்க வேண்டும். 

மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News