பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

Bigg Boss Tamil 7 Contestants Salary List: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 4, 2023, 01:21 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியது.
  • இதில் பரபரப்பான பல போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?  title=

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் முன்னணி நிகழ்ச்சியாக விளங்குவது, பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் ஆரம்பித்தது. இதில் பரபரப்பான பல போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 7:

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அதன் 7வது சீசனை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சீசனும் சில பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த சீசனில் வீட்டையே ரெண்டாக்கியுள்ளனர். பிக்பாஸ் இல்லத்தில் 18 போட்டியாளர்களுள் கேப்டனாக செயல் படுபவரை ஈர்க்க தவறியவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அடைக்கின்றனர். அவர்கள்தான் வீட்டில் அனைவருக்கும் சமைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். இப்படியாக பல புதுப்புது ரூல்ஸ்கள் பிக்பாஸின் இந்த சீசனில் போடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்

போட்டியாளர்களும் அவர்களின் சம்பள விவரமும்:

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக நுழைந்துள்ளவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம். 

>துணை நடிகரும் சினிமா பிரபலமும் ஆன கூல் சுரேஷிற்கு ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

>யூடியூப் பிரபலமும் நடிகையுமான பூர்ணிமா ரவிக்கு 15ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ரவீணா தஹாவிற்கு ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் சம்பளமாம்.

>துணை நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

>பாடலாசிரியரும் ராப் பாடகருமான நிக்ஸனுக்கு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது. 

Biggbosstamil

>பாரதி கண்ணம்மா தொடர் நடிகை வினுஷாவிற்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம். 

>நடன கலைஞர் மணி சந்திராவிற்கு ரூபாய் 18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>லவ் டுடே பட நடிகை அக்‌ஷ்யா உதயகுமாருக்கு ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் என கூறப்படுகிறது.

>வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளமாம். 

>நடன கலைஞர் ஐஷுவிற்கு ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது. 

>விக்ரம் பட நடிகை மாயா கிருஷ்ணனுக்கு ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் சம்பளம். 

>பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரம், ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>பாடகர் யுகேந்திரனிற்கு ரூபாய் 27ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>நடிகை விசித்ராவிற்கு 27ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>அணன்யாவிற்கு 12ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

>சீரியல் நடிகர் விஷ்ணுவிர்கு ஒரு நாளைக்கு 25ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>கதை சொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லதுரைக்கு ஒரு நாளைக்கு 28ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

>விஜய் வர்மாவிற்கு ரூபாய் 15ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

முதல் நாமினேஷன்..! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் களமிறங்கிய இரண்டாவது நாளே நாமினேஷன் நடத்தப்பட்டது. இதில் ஜோவிகா, பவா செல்லதுரை, கூல் சுரேஷ், விசித்ரா, பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும். 

மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News