விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி (Big Boss)மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் பலரும் ஆர்வமாக இருந்தனர். முதல் சீசன் பெற்ற வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு சமீபத்தில் 5-வது சீசன் நிறைவடைந்தது.
ALSO READ | வனிதா Vs ஜூலி: களைகட்டப்போகும் பிக்பாஸ் அல்டிமேட்..!
இந்நிலையில் மக்களை மீண்டும் உற்சாகப்படுத்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் (Bigboss ultimate) நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும், அதனை கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும், 24 மணி நேரமும் இதனை கண்டு மகிழலாம் என்றும் அறிவிப்பு வெளியானது. இதில் போட்டியாளர்களாக முதல் 5 சீசன்களில் பங்கேற்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.
அதே பிக் பாஸ் வீட்டில் சில மாறுபாடுகளை மட்டும் செய்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான logoவை பிக்பாஸ்-5 பைனல்ஸின் போது கமல் ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் வெளியிட்டனர். இதில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி போன்ற போட்டியாளர்கள் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. மேலும் இதில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த ஓவியாவை பலரும் பார்க்க காத்துக்கொண்டிருக்கின்றனர். ஜூலி, வத்திக்குச்சி வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி பெயரை கேட்டதுமே இந்நிகழ்ச்சி நன்கு சூடுபிடிக்கும் என்று மக்கள் மனதில் தோன்றிவிட்டது.
மேலும் இதில் அனிதா சம்பத், பாலாஜி போன்றொரும் கலந்துகொள்வதாக கூறப்படும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி நாளை (ஜனவரி-30) மாலை 6:30 மணியளவில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது.
ALSO READ | Bigboss: பற்றவைக்க தயாராகும் சுரேஷ் தாத்தா.. ஆட ரெடியாகும் அபிராமி..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR