மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்!

தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியான சில த்ரில்லர் திரைப்படங்கள் எந்த காலகட்டத்திலும் பார்க்க ஏற்ற படமாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2023, 06:21 AM IST
மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்! title=

யு-டர்ன் - பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஒரு திகில் திரைப்படம் தான் 'யு-டர்ன்'.   தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படத்தில் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா, ரவி பிரகாஷ், நரேன் போன்ற பலர் நடித்திருந்தனர்.  மேம்பாலம் ஒன்றில் நடக்கும் விபத்து குறித்து கதை எழுதும் பெண் பத்திரிக்கையாளர் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்? மேம்பாலத்தில் நடக்கும் விபத்துக்கள் தற்செயலா? கொலையா அல்லது அமனுஷ்யமா? என்பதை அந்த பத்திரிகையாளர் கண்டுபிடித்தாரா என்பதை படம் திகில் கலந்த பயத்தோடு காட்டியிருக்கிறது.

அஞ்சாம் பத்திரா - மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான மலையாள மொழியின் கிரைம் திரில்லர் படம் தான் 'அஞ்சாம் பத்திரா'.  இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஷரஃப் யு தீன், ஸ்ரீநாத் பாசி, ஜினு ஜோசப் மற்றும் உன்னிமய பிரசாத் ஆகியோர் நடித்திருந்தனர்.  காவலர்கள் பலரையும் இரக்கமின்றி தொடர்ச்சியாக கொலை செய்யும் ஒரு முகம் தெரியாத சைக்கோ கில்லரை கண்டுபிடிக்க குற்றவியல் நிபுணர்கள், போலீசார் முயற்சி செய்யும் கதை தான் இது.  

மேலும் படிக்க: அழகில் வரைந்த ஓவியமா திரிஷா? பொன்னியின் செல்வன் 2-க்குப் பிறகு ரசிகர்களின் ரியாக்ஷன்

மாயவன் - சி. வி. குமார் இயக்கத்தில் சந்தீப் கிசன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படம் தான் 'மாயவன்'.  இப்படத்தில் லாவண்யா திரிபாதி, ஜாக்கி செராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாசு, பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பலர் நடித்திருந்தனர்.  மர்மமான முறையில் நடைபெறும் கொலைகளை விசாரிக்க செல்லும் போலீசார் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.  

ரங்கி தரங்கா - அனுப் பண்டாரி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான கன்னட மொழி மர்மத் திரில்லர் படம் தான் 'ரங்கி தரங்கா'.  இப்படத்தில்  நிருப் பண்டாரி, ராதிகா சேத்தன், அவந்திகா ஷெட்டி மற்றும் மூத்த நடிகர் சாய்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ஒரு நாவலாசிரியரும், அவரது மனைவியும் தங்களது சொந்த கிராமத்திற்கு செல்லும்போது அங்கு அவர்கள் சந்திக்கும் சில அமானுஷ்ய நிகழ்வுகளை நோக்கி இப்படத்தின் கதை நகர்கிறது.

வெட்டா - ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான மலையாள மொழி சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் தான் 'வெட்டா'.  இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சந்தியா மற்றும் தீபக் பரம்போல் ஆகியோர் நடித்திருந்தனர்.  நடிகை காணாமல் போகும் வழக்கை இரண்டு போலீஸ் அதிகாரிகள் விசாரிக்க தொடங்குகின்றனர், அவர்கள் குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை இப்படம் காட்டுகிறது.

லூசியா - பவன் குமார் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான கன்னட மொழி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் தான் 'லூசியா'.  இப்படத்தில் சதீஷ் நினாசம், ஸ்ருதி ஹரிஹரன், அச்யுத் குமார் மற்றும் ரிஷப் ஷெட்டி போன்ற பலர் நடித்திருந்தனர்.  தூக்கமின்மையால் அவதிப்படும் ஒரு மனிதன் லூசியா என்ற மருந்தை வாங்கி சாப்பிடுகிறான், அப்போது அவன் தனது ஆசைகளை எல்லாம் கனவுகளில் நனவாக்கி கொள்கிறான்.   கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையே ஒரு மனிதன் வாழும் கதை தான் இப்படம்.

தனி ஒருவன் - மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் 'தனி ஒருவன்'.  இப்படத்தில்  அரவிந்த் சாமி,  நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், அபிநயா, தம்பி ராமையா போன்ற பலர் நடித்திருந்தனர்.  செல்வாக்கு மிக்க நபர் மருத்துவ துறையில் செய்யும் சட்ட விரோதமான செயல்களை ஒரு நேர்மறையான ஐபிஎஸ் அதிகாரி வெளிகொண்டுவருவது தான் இந்த படத்தின் கதை.

அருவி - அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் 'அருவி'.  இப்படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், பிரதீப், லட்சுமி கோபாலசாமி, முகமது அலி பேக், கவிதா பாரதி போன்ற பலர் நடித்திருந்தனர்.  ஒரு கண்ணியமான குடும்பத்திலிருந்த பெண் சில தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி, குடும்பத்தை வீட்டு வெளியேறிய பின்னர் சமூகத்தில் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.

இறைவி - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் 'இறைவி'.  இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவாரியா, கருணாகரன் போன்ற பலர் நடித்திருந்தனர்.  மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை இப்படம் காட்டுகிறது.

பாபநாசம் - ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் பாபநாசம், இது  திரிஷ்யம் எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவலாகும்.  இப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, ஆஷா சரத் , கலாபவன் மணி , எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், ஆனந்த் மகாதேவன், எஸ்தர், ரோஷன் பசீர் போன்ற பலர் நடித்திருந்தனர்.  எதிர்பாராமல் தனது குடும்பத்தினர் செய்த குற்றத்தை மறைக்க போராடும் ஒரு குடும்ப தலைவனின் கதை தான் இந்த படம்.  பெரிதாக படிப்பறிவு இல்லாத குடும்ப தலைவன் சட்டத்தை ஏமாற்றி எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதை இப்படம் காட்டியுள்ளது.

மேலும் படிக்க | 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News