மலைக்க வைக்கும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு! அட..இவ்வளவு பெரிய பணக்காரரா?

Sivakarthikeyan Salary and Net Worth: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 14, 2024, 05:40 PM IST
  • சிவகார்த்திகேயனின் அயலான் படம் சமீபத்தில் வெளியானது.
  • இவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
  • முழு விவரம் இதோ..
மலைக்க வைக்கும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு! அட..இவ்வளவு பெரிய பணக்காரரா?  title=

தமிழ் திரையுலகின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், சிவகார்த்திகேயன். கடந்த 10 ஆண்டுகளில் இவரது வளர்ச்சி பலரையும் வியந்து பார்க்க வைத்தது. இவர் நடிப்பில் தற்போது அயலான் படம் வெளியாகியுள்ளது. 

ஆங்கர் டூ ஆக்டர்:

சிவகார்த்திகேயன், ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட சிவா, 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 

சிவகார்த்திகேயனுக்கு கிராமத்து கதாநாயகன் கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தி போக, அதே போன்று பல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தது. ஆனால், அதற்கு மாறாக இவர் நகரத்து பையனாக நடித்த படங்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை. 

மேலும் படிக்க | திடீரென மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை! செம ஷாக்கில் ரசிகர்கள்..

சம்பள விவரம்..

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது, ஒரு படத்திற்கு ரூ. 12-13 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பாேதோ, அல்லது அதற்கு முன்னர் போட்டியாளராக இருந்த போதாே அவர் சில ஆயிரங்களையே சம்பாதித்துள்ளார். அது மட்டுமன்றி, தான் முதலில் நடித்த படத்திற்காக அவர் பத்தாயிரம் ரூபாய்தான் சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது. 

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமன்றி தற்போது பின்னணி பாடகராகவும், பாடலாசியராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். எந்த வித சினிமா பின்புலனும் இன்றி தனது திறமையால் வளர்ந்த இவருக்கு, தற்போது பல கோடி கணக்கில் சொத்துகள் இருக்கின்றன. 

சிவகார்த்திகேயனின் சொத்து விவரம்..

சிவகார்த்திகேயன் கடந்த 11 ஆண்டுகளில் பல கோடிகளை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. சொகுசு கார், சொந்த வீடு, பூர்விக நிலம், பட தயாரிப்பு மூலம் வந்த சொத்துகள் என இவருக்கு ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

சம்பளம் வாங்காமல் நடித்த சிவா..

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் இரண்டு நாட்களுக்கு வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படத்தை ஆர்.ரவிகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் மட்டும் சுமார் 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிகளால், படத்தின் பட்ஜெட் குறிப்பிட்ட தொகையை விட தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் இப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். இதை அவரே சில நேர்காணல்களில் கூறியும் இருக்கிறார். 

ஏறு முகத்தில் சிவகார்த்திகேயன்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் பல கடந்த சில ஆண்டுகளில் தோல்வியுற்றன. ஆனால், கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள அயலான் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனால் இவரது சினிமா மார்கெட் ஏறுமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மலையாள படத்திற்கு இசை அமைக்கும் அனிருத்! யார் படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News