இந்திய சினிமா 2017 டாப் 10 படமான 'விக்ரம் வேதா' இந்தியில் ரீமேக் ஆகிறது.

தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 15, 2018, 01:44 PM IST
இந்திய சினிமா 2017 டாப் 10 படமான 'விக்ரம் வேதா' இந்தியில் ரீமேக் ஆகிறது. title=

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிப்பில், மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த படம் ‘விக்ரம் வேதா’. கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’  விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. மேலும் இந்த படத்தில் கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இசை மிகவும் பேசப்பட்டது.

தற்போது ‘விக்ரம் வேதா’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தியில் ஒய் நாட் ஸ்டுடியோஸ், பிளான் சி ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தியிலும் இந்த படத்தை புஷ்கர் - காயத்ரி இயக்க உள்ளனர்.

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் நடிக்க உள்ள நடிகர்-நடிகை மற்றும் மற்ற டெக்னிஷியன் பற்றி எந்தவித தகவலும் வெளியிடப்பட வில்லை. விரைவில் அனைத்து தகவலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Trending News