பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி குடித்தது ஏன்? அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Update: பரணிக்கு தெரிய வந்த சௌந்தரபாண்டியின் சூழ்ச்சிகள்.. அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2024, 01:20 PM IST
  • பரணிக்கு தெரிய வந்த சௌந்தரபாண்டியின் சூழ்ச்சிகள்
  • அடுத்து நடக்க போவது என்ன?
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்
பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி குடித்தது ஏன்? அண்ணா சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி மாத்தி குடிச்சிட்டா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். 

முத்துபாண்டியை கொல்ல போன சண்முகத்தை பரணி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

வீட்டுக்கு வந்த ஷண்முகம் இசக்கியிடம் அவனை கொல்லுற வரைக்கும் இந்த தாலி கழுத்திலே இருக்கட்டும் என கூறுகிறான். பிறகு பரணி சண்முகத்திடம் அன்பாக பேச முயற்சி செய்ய உன் அண்ணனை காப்பாத்த இப்படி செய்யாத என சண்முகம் கோபப்படுகிறான். என்ன இருந்தாலும் அவன கொல்லாமல் விட மாட்டேன் என்று புலம்ப பரணி ஊசி போட்டு அவனை தூங்க வைக்கிறாள். 

மேலும் படிக்க | “விஜய்னாவுடன் போட்டியிட நான் என்ன லூசா?” உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

மறுபக்கம் சௌந்தரபாண்டி பாண்டியம்மா ஆகியோர் பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி மாத்தி குடிச்சிட்டா என்று பேசிக் கொண்டிருந்ததை யாரோ ஒட்டு கேட்டு விட்டதாக புரிந்துக் கொள்கின்றனர். 

உடனே இந்த விஷயங்கள் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் அவன் யாருன்னு கண்டுபிடிச்சு கொன்னுடனும் என்று சொல்ல சிவபாலன் எஸ்‌கேப் ஆகிறான்.

அண்ணா

அடுத்து மறுநாள் காலையில் பரணி வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருக்க அங்கு வந்த சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கான காரணத்தை சொல்ல பரணி இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்லாத, நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி அனுப்புகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News