அமுதாவும் அன்னலட்சுமியும்: மாணவியுடன் தகாத முறையில் நடந்த வாத்தியார்.‌‌.அமுதா எடுத்த முடிவு

Amudhavum Annalakshmiyum Today's May 22 Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2023, 11:38 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: மாணவியுடன் தகாத முறையில் நடந்த வாத்தியார்.‌‌.அமுதா எடுத்த முடிவு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாணவி அமுதாவிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக கூறுகிறாள். 

மேலும் படிக்க | காவடியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷண்முகம் - அண்ணா சீரியல் முதல் எபிசோட் அப்டேட்!

ஆனால் பள்ளியில் பணிபுரிபவர்கள் ஆசிரியரை காப்பாற்ற வேண்டும், இல்லேன்னா ஸ்கூல் பெயர் கெட்டு விடும் என்று சொல்ல, தவறு செய்த ஆசிரியரை அமுதா அறைந்து பசங்களுக்காக தான் ஸ்கூலு, வாத்தியாரை காப்பாத்த இல்ல பிள்ளைகளை பலி குடுக்க நான் விட மாட்டேன் என ஆவேசப்படுகிறாள். 

மேலும் தப்பான ஆசிரியரை வச்சிருந்தா தான் பள்ளிக் கூடம் பேரு தப்பா ஆகும் என சொல்லி அமுதா அவரை இழுந்து வந்து போலீசிடம் ஒப்படைக்கிறாள். அமுதா அவர் மேல் கம்பளைண்ட் கொடுக்கிறாள். 

அதன் பிறகு வடிவேலு பள்ளியில் நடந்த பிரச்சனையை அன்னலட்சுமியிடம் சொல்ல அமுதா செய்த விஷயத்தை கேள்விபட்டு அன்னலட்சுமி அமுதாவிடம் போன அன்னைக்கே இந்த மாதிரி பிரச்சனை ஆயிருச்சேம்மா என சொல்ல அமுதா மனசுக்கு பட்டதை நான் செய்வேன் என சொல்கிறாள். 

மாணிக்கம் அவளை பாராட்ட அதன் பிறகு செந்திலிடம் அமுதா தான் செய்தது உங்களுக்கு தப்பா தோணுதா என கேக்க , அவன் இல்லை என சொல்லி சிவந்திருந்த அமுதாவின் கைகளுக்கு முத்தமிடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News