கமல்ஹாசன் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2022, 06:57 PM IST
  • விக்ரம் ஜூன் 3ம் தேதி வெளியீடு.
  • நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகும் படம்.
  • ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு.
கமல்ஹாசன் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மஹேஸ்வரி, நந்தினி போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் சமீபத்தில் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.  இந்த படம் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  கிட்டத்தட்ட நான்கு வருட இடைவேளைக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகப்போகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

movies

மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!

கமல்ஹாசன் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் எப்போதும் இணைத்துள்ளார்.  தற்போது இப்படத்தின் பணிகளை முடிப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமல் தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த செய்திகள் வெளியான நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் பாலிவுட் திரையுலகின் பிரபலமான அமிதாப் பச்சன் நடித்துள்ளதார் என்று கூறப்படுகிறது.  இப்படத்தின் மூலம் 37 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன்-அமிதாப் பச்சன் கூட்டணி இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அமிதாப் பச்சன் வருவார் என்று கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன் காதிபத்திரத்தில் நடிக்க இரண்டு பெரிய நடிகர்களிடம் படக்குழு அணுகியது.  ஆனால் அதில் ஒருவருக்கு கால்ஷீட் பிரச்னையும், மற்றொருவருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் இருந்த காரணத்தினால் அவர்களால் இந்த ப்ராஜெக்டில் இணைய முடியவில்லை.  அதனையடுத்தே படக்குழு அமிதாப் பச்சனை அணுகியது, அவர் ஒப்புக்கொண்டதையடுத்து அவரது காட்சிகள் படமாக்கப்பட்டது.  அவரது காட்சிகள் சென்னையில் ஒரு நாளுக்கும் குறைவாக கிட்டத்தட்ட 4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே படமாக்கப்பட்டு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News