இந்த ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி நடித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2023, 04:55 PM IST
  • சொப்பன சுந்தரி படம் நாளை ஓடிடியில் முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
  • கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சொப்பன சுந்தரி படம் திரையரங்கில் வெளியாது.
இந்த ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி: ரிலீஸ் தேதி அறிவிப்பு title=

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது நடிகையாக வளர்ந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி படம் திரையரங்குகளில் வெளியாது. சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீபா சங்கர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஷ ரா, கருணாகரன், சதீஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் & ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உடன் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து உள்ளது. விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைக்க, அஜ்மல் தஹ்சீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்துள்ள சொப்பன சுந்தரி படம் மே 12 ஆம் தேதி (நாளை) ஓடிடியில் முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. எனவே OTT பிரீமியர் மூலம், பார்வையாளர்கள் சொப்பன சுந்தரியை தங்கள் வீட்டுத் திரையில் பார்த்து, இந்த டார்க் காமெடி படத்தை குடும்பத்துடன் ரசித்து மகிழுங்கள்.

மேலும் படிக்க | பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!

சொப்பன சுந்தரி கதை
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது அக்கா லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இவர்களது அம்மா தீபா சங்கருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். ஏழ்மையின் காரணமாக லக்ஷ்மி பிரியாவிற்கு திருமணம் ஆகாமல் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து குடும்பத்தை சமாளித்து வருகிறார். இந்த சமயத்தில் இவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. இதை வைத்து தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் இவரது அண்ணன் கருணாகரன் அந்த கார் தனக்கு தான் சொந்தம் என்று பிரச்னை செய்கிறார். இதனால் கார் போலீசிடம் சிக்கி கொள்கிறது. இறுதியில் அந்த காரை வெளியில் எடுத்தார்களா? அந்த காருக்குள் என்ன இருந்தது என்பது தான் சொப்பன சுந்தரி படத்தின் கதை.

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முதன்மையான கேரக்டரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News