நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா பிப்வரி 18 ஆம் தேதியான இன்று இரவு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதுபோல் இந்த ஆண்டு சிவாரத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அவர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் ஈஷா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: ஆசைகள் அனைத்தும் நிறைவேற செய்ய வேண்டியவை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஆண்டுதோறும் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு கூட சமந்தா கலந்து கொண்டார். இந்தமுறையும் அவர் தவறாமல் கலந்து கொள்ள இருகிகறார். இதனையொட்டி காலையிலேயே சாகுந்தலம் போஸ்டரை போட்டு மஹா சிவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துவிட்டார். அவரைத் தொடர்ந்து நடிகை மிருணாளினி கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். அவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆதியோகி சிலை முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மிருணாளினி பதிவிட்டுள்ளார்.
மேகா ஆகாஷ் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோரும் ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் இரவு முழுவதும் ஈஷா யோகாவில் நடைபெறும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். நடிகைகள் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு கீழே கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள் சிவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’!
ர்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ