தன்னை விட 12 வயது மூத்த நடிகரை காதலித்த ராஷ்மிகா! அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?

Actress Rashmika Mandanna Relationship : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தான், தன்னை விட வயதில் 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால், அவரது இந்த காதல் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 5, 2024, 01:34 PM IST
  • ராஷ்மிகா மந்தனா கன்னட நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருந்தார்
  • இந்த திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது
  • இதற்கு காரணம் என்ன?
தன்னை விட 12 வயது மூத்த நடிகரை காதலித்த ராஷ்மிகா! அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா? title=

Actress Rashmika Mandanna Relationship : தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும், இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரை பலர் ‘நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா’ என்றும் செல்லமாக அழைப்பதுண்டு. அழகான சிரிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகின் பக்கம் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். இவர், பெரிய நடிகையாக மாறுவதற்கு முன்னர், ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். அந்த நடிகர் யார் தெரியுமா? 

12 வயது மூத்தவருடன் காதல்:

நடிகை ராஷ்மிகா இப்போது தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தாலும், அவர் அறிமுகமானது கன்னட திரையுலகில்தான். இவர் முதன் முதலாக நடித்திருந்த படத்தின் பெயர் ‘கிரிக் பார்டி’. இந்த காதல் படத்தில் ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஒன்று சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள சில கால ரிலேஷன்ஷிப்பிற்கு பிறகு, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அப்பாேது ராஷ்மிகாவிற்கு 21 வயது, ரக்ஷித் ஷேட்டிக்கு வயது 34. 

நின்று போன நிச்சயதார்த்தம்!

ராஷ்மிகா-ரக்ஷித் ஷெட்டிக்குள் கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் இருந்தாலும், இவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துதான் பின்னர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்தை 2018ஆம் ஆண்டில் நிறுத்தி விட்டார். இதனால் ரக்ஷித் ஷெட்டியின் இதயம் மட்டுமல்ல, ரசிகர்கள் பலரின் இதயமும் சுக்கு நூறாக உடைந்தது. ராஷ்மிகாவின் முடிவை பலர் விமர்சனம் செய்தாலும், ஒரு சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். இது நடந்து தற்போது 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. 

மேலும் படிக்க | “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல” போனி கபூர் கூறிய அதிர்ச்சி தகவல்!

யார் இந்த ரக்ஷித் ஷெட்டி:

கன்னட மொழியில் பிரபல ஹீராேவாக வலம் வருபவர், ரக்ஷித் ஷெட்டி. இவர் நடிகர் மட்டுமல்ல ஒரு திறமையான இயக்குநரும் கூட. இவர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘777 சார்லீ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு சிறந்த கன்னட மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு Sapta Sagaradaache Ello - Side A, Sapta Sagaradaache Ello - Side B என இரு படங்கள் வெளியாகி கன்னடம் மட்டுமன்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றன. ‘காந்தாரா’ படம் மூலம் உலகளவில் பிரபலமான ரிஷம் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டியின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் ஆவார். 

Rashmika Mandanna Rakshit Shetty

மீண்டும் காதலில் விழுந்த ராஷ்மிகா? 

நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக பல நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும டியர் காமரேட் ஆகிய இரு படங்களும் பெரிய வெற்றி பெற்றன. இதில் இவர்களுக்குள் இருந்த கெமிஸ்டிரியும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு இவர்கள் ஒன்றாக சேர்ந்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போதும் கூட ராஷ்மிகாவின் பிறந்தநாளை கொண்டாட இருவரும் வெளிநாட்டிற்கு ஒன்றாக சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மாமியாருக்கு லிப் கிஸ் கொடுத்த மருமகன்! இந்திரஜா சங்கர் திருமணத்தில் நடந்த கூத்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News