Keerthy Suresh : முத்தக்காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்!? அதுவும் ‘அந்த’ நடிகருடனா?

Keerthy Suresh Kissing Scene: தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவர், ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம். அது என்ன படம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 23, 2024, 06:38 PM IST
  • பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி
  • முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம்!
  • எந்த நடிகருடன் தெரியுமா?
Keerthy Suresh : முத்தக்காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்!? அதுவும் ‘அந்த’ நடிகருடனா? title=

Keerthy Suresh Kissing Scene: கோலிவுட் உலகில், டாப் நடிகைகளுள் ஒருவராக இடம் பிடிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பவர், கீர்த்தி சுரேஷ். தமிழ் திரையுலகில் 2015ஆம் ஆண்டு அறிமுகமான இவர், தற்போது கிட்டத்தட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார். இந்த நிலையில், அவர் நடிக்கும் ஒரு படத்தில், இடம் பெற்றிருக்கும் காட்சி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

சிரிப்பழகி கீர்த்தி சுரேஷ்:

80ஸ் நடிகை மேனகா சுரேஷின் இரண்டாவது மகள், கீர்த்தி சுரேஷ். பார்ப்பதற்கு தனது தாயை போலவே இருக்கும் இவர், அவரது சிரிப்பிலும் அப்படியே கார்பன் காப்பியாக இருக்கிறார். கேரளாவில் இருந்த இவருக்கு, சிறு வயதில் இருந்தே படங்களில் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது. க்யூட் குழந்தையாக நடித்து வந்த கீர்த்தி, வளர்ந்த பின்பு, க்யூட் நாயகியாகவும் மாறினார். தமிழில் அவருக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த படம், ‘இது என்ன மாயம்’. 2015ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம், பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், தனது அமைதியான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார். 

2016ஆம் ஆண்டு வெளியான ரஜினி முருகன் படத்தில், இவருக்கும் சிவகார்த்திகேயனுக்குமான கெமிஸ்ட்ரி வர்க்-அவுட் ஆக, “உன் மேல ஒரு கண்ணு” பாடலில் எக்ஸ்பிரஷன் கொடுத்து அனைவர் மனதையும் சிறகடிக்க வைத்தார். தொடர்ந்து, ரெமோ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பையும் சிரிப்பையும் ரசித்து பார்த்த ரசிகர்கள், எந்த காரணத்தினாலோ சில படங்களுக்கு பிறகு அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர். சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மஹாநதியில நடித்த கீர்த்தி, தான் ஒரு அழகான நடிகை என்பதை தாண்டி, சிறந்த கலைஞர் என்பதை நிரூபித்தார். 

மேலும் படிக்க | ‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..

பாலிவுட்டில் கால்பதிக்கிறார்..

நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தியில் தனது முதல் படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு தமிழில், விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம், தெறி. இந்த படத்தின் இந்தி ரீ-மேக் தற்போது தயாராகி வருகிறது. இதில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். வருண் தவான், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘பேபி ஜான்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அட்லீயின் கதையாக இருந்தாலும், இப்படத்தை கலீஸ் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

Keerthy Suresh

முத்தக்காட்சி..

நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதல் இந்தி படத்திலேயே மிகவும் தைரியமாக கீர்த்தி, உதட்டுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை கீர்த்தி பல்வேறு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து விட்டாலும், உதட்டுடன் உதட்டு முத்தக்காட்சியில் லைவாக நடித்ததில்லை. அதை, பேபி ஜான் படத்தில் உடைத்தெறிவார் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதில் நடிக்க, கீர்த்தி சுமார் ரூ.4 கோடியை சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News