பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல்

Last Updated : May 24, 2017, 05:16 PM IST
பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் title=

பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

2009-ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்கள்

இந்நிலையில், உதகையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆர். வேலுசாமி அவர்கள், பத்திரிக்கையாளர்களையும், எங்கள் குடும்பத்தையும் அவதூறாக பேசியதாக 8 நடிகர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு நடிகர்களை ஆஜராக நீதிமன்றம் கோரியது. 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.

ஆனால் 8 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 நடிகர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பேருக்கு நீலகிரி குற்றாவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். 

Trending News