லத்தி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Written by - RK Spark | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2022, 07:57 PM IST
  • வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு, ரமணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படம்.
  • விஷால் வழக்கம்போல பிட்டாக தனது கம்பீரமான தோற்றத்தில் அசத்தியிருக்கிறார்.
லத்தி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!  title=

வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு, ரமணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்களின் வெளியாகி உள்ளது.  லத்தி படம் உருவாகும் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது அனைவராலும் பரவலாக பேசப்பட்டது.  மேலும் படத்தில் உள்ள சண்டை காட்சிகள் பெரிதாக பேசப்படும் என்று செய்திகள் வெளியானது.  சென்னை நீலாங்கரையில் கான்ஸ்டெபிலாக இருக்கும் விஷால் மனைவி சுனைனா மற்றும் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.  குற்றவாளியை அடித்ததற்காக சஸ்பெனில் இருக்கும் விஷால் பிரபுவின் உதவியால் மீண்டும் பணியில் சேருகிறார். பின்பு பிரபு அவரிடம் ஒரு உதவி கேட்க அதனால் வில்லன் உங்களிடம் விஷால் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே லத்தி படத்தில் கதை.

விஷால் வழக்கம்போல பிட்டாக  தனது கம்பீரமான தோற்றத்தில் அசத்தியிருக்கிறார், ஒரு நிஜமான போலீஸ் அதிகாரி பார்ப்பது போல் இருந்தது.  ஒரு சாதாரண கான்ஸ்டெபிலாக நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார், சண்டை காட்சிகளில் தன் உயிரை கொடுத்து நடித்துள்ளார்.  விஷாலின் மனைவியாக வரும் சுனைனாவிற்கு கதையில் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தான் வரும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். இவர்களை தாண்டி விஷாலின் பையனாக நடித்துள்ள சிறுவன் நன்றாக நடித்துள்ளார்.

மேலும் படிக்க | துணிவுடன் மோத கொஞ்சம் சிந்திக்கணும் - மதுரையில் முற்றும் மோதல்

கொடூரமான வில்லனாக இந்த படத்தின் தயாரிப்பாளரான ரமணாவே நடித்துள்ளார். முதல் பாதி முழுக்க அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் சற்று தூக்கலாகவே இருந்தன.  ரமணா தன்னை யார் அடித்தது என்று கண்டுபிடிக்கும் காட்சி சிறப்பாகவே இருந்தது.  ரமணாவின் அப்பாவாக வருபவர் இன்னும் சற்று நடித்து இருந்திருக்கலாம்.  இரண்டாம் பாதி முழுக்கவே ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் படியாக திரைக்கதை உள்ளது, அதை முடிந்த அளவிற்கு சுவாரசியமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோத் குமார்.  என்னதான் சுவாரசியமான கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பை தட்டுகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.  தன் மகனுக்காக வில்லன் கும்பலிடம் விஷால் கெஞ்சும் காட்சி, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை விஷால் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார்.  முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதியும் அதே வேகத்தில் சென்று பின்பு ஒரே இடத்தில் நின்று விடுகிறது. லத்தி - பிடிப்பு.

மேலும் படிக்க | மாளவிகா மோகனனை தாக்கினாரா நயன்தாரா... வைரல் வீடியோ முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News