விக்ரம் பாடிய ஏஆர் ரஹ்மான் பாடல்... த்ரிஷாவுக்கு சமர்பித்த இந்தி நடிகர் - வைரல் வீடியோ

ஏஆர் இசையமைத்து, பாம்பே திரைப்படத்தின் 'உயிரே... உயிரே' பாடலை ஒரு இந்தி நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 1, 2022, 10:02 PM IST
  • நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழு பங்கேற்றது.
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியானது.
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
விக்ரம் பாடிய ஏஆர் ரஹ்மான் பாடல்... த்ரிஷாவுக்கு சமர்பித்த இந்தி நடிகர் - வைரல் வீடியோ title=

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து, படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் ஆழாமாக வேரூன்றிவிட்டன. இதனால், படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நிரம்பியுள்ளது. 

மேலும் படிக்க | முதல் நாளே 100 கோடி அருகில் - பொன்னியின் செல்வன் மெகா வசூல்

படம் தமிழ்நாடு மட்டுமின்றி, உலகமும் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு சான்றாக, படம் வெளியான நேற்று மட்டும், உலகெங்கும் மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த மாபெரும் வெற்றிக்கு படக்குழுவின் அயராத பிரமோஷனும் ஒரு காரணம் என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு, நடிகர்களும், படக்குழுவும் பிரமோஷன்களை மேற்கொண்டன. இதற்காக, இந்தியாவின் பல நகரங்களுக்கு அவர்கள் பயணித்து பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு. செய்தியாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்து வந்தனர். 

அந்த வகையில், ஹிந்தியில் பிரபலமான கபில் ஷர்மாவின் நிகழ்ச்சிக்கு பொன்னியின் செல்வன் படக்குழு பிரமோஷனுக்காக சென்றிருந்தது. அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளுரும், பாலிவுட் நடிகருமான கபில் சர்மா, நடிகர் விக்ரமை பாட்டு பாடும்படி வேண்டுகோள் விடுத்தார். 

இதைத் தொடர்ந்து விக்ரம், பாம்பே படத்தில் இடம்பெற்ற 'உயிரே... உயிரே' பாடலை தமிழில் பாடியிருந்தார். விக்ரம் பாடிய காணொலியை கபில் ஷர்மா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த பாடலை இந்தியில் கபில் ஷர்மாவே பாடி, அதை த்ரிஷாவிற்கு சமர்பிப்பதாக கூறினார். த்ரிஷாவும் மெய்மறந்து அந்த பாடலை கேட்டு அவரை பாராட்டினார். இந்த காணொலி தற்போது ரசிகர்களின் ஹார்ட்டுகளை அள்ளி வருகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

வைரலாகும் இந்த காணொலியை ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படக்குழு கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, சோனி என்டர்டெய்ண்மென்ட் சேனலில் இன்றும், நாளையும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும். 

மேலும் படிக்க | ‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்' - எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்... மதுரையில் கலகலப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News