தளபதி விஜய் "சர்கார்" படத்தின் இசை அக்டோபர் 2-ல் வெளியிடப்படும்

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்-ன் சர்கார் படத்தின் இசை வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2018, 07:32 PM IST
தளபதி விஜய் "சர்கார்" படத்தின் இசை அக்டோபர் 2-ல் வெளியிடப்படும் title=

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்-ன் சர்கார் படத்தின் இசை வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது. 

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில், ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சர்கார் படத்தின் இசை வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் #SarkarAudioFromOct2nd என்ற ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். 

 

சர்கார் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் பணியாற்றி வருகின்றனர்.

இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News