தனுஷுக்காக பிரசன்னா வெளியிட்ட வைரல் வீடியோ

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பிரசன்னா வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 28, 2022, 06:49 PM IST
  • தனுஷ் 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
  • அதனையொட்டி அவர் பியானோ வாசிக்கும் வீடியோ வெளியானது
  • இதனை நடிகர் பிரசன்னா வெளியிட்டார்
தனுஷுக்காக பிரசன்னா வெளியிட்ட வைரல் வீடியோ title=

துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான தனுஷ் தன் ஆரம்பகாலத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் மனம் தளராத தனுஷ் தன் திறமைகளை வளர்த்து படிப்படியாக முன்னேறினார். அப்படி முதலில் பாலிவுட் சென்ற தனுஷ் அங்கு தனது வெற்றிக்கொடியை நாட்டினார். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டுக்கும் சென்று அங்கு தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹாலிவுட்டில் அவர் நடித்த தி க்ரே மேன் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அஜித்? வெளியான சஸ்பென்ஸ்

இந்தச் சூழலில் தனஷ் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. மேலும் பலரும் தனுஷுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.

 

அந்தவகையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், தனது பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை தனுஷின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர். தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் சேதுபதியின் ரியல் ’ஜானு’ குறித்த சுவாரஸ்ய தகவல்

மேலும் படிக்க | வாஜ்பாயாக நடிக்கப்போறது யார் தெரியுமா? - வெளியானது எமர்ஜென்ஸி படத்தின் அப்டேட்!

மேலும் படிக்க | "தி லெஜண்ட்" படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் படிக்க | எண்ணித்துணிந்த இயக்குநர்... வாழ்த்திய நட்பு படை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News