ஜக்கி வாசுதேவின் இயக்கத்திற்கு அர்ஜுன் ஆதரவு

"மண்ணைச் சேமிப்பது உங்கள் சொந்த குடும்பத்தையும் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவதற்கு சமம்" என நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 21, 2022, 06:29 PM IST
  • ஜக்கி வாசுதேவ் சுற்றுப்பயணம்
  • ஜக்கிக்கு அர்ஜுன் ஆதரவு
  ஜக்கி வாசுதேவின் இயக்கத்திற்கு அர்ஜுன் ஆதரவு title=

மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் ஜக்கி வாசுதேவ் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு அனைத்து நாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்களும், பொதுமக்களும் ஆதரவு கொடுத்துவருகின்றனர்.

அந்த வகையில் இந்த இயக்கத்திற்கு தனது ஆதரவினை நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பேரழிவோ அல்லது எந்த ஒரு நெருக்கடியோ, அதை நடைபெறாமல் தடுக்க சிறந்த வழி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதே.

இப்போது ஒரு பெரிய உலகளாவிய நெருக்கடி 'பாலைவனமாக்கல்' ஆகும். நமது தாய் பூமியின் வளமான, இயற்கையான கரிம மண் அதன் நுண்ணுயிரிகளையும் முக்கிய உயிரினங்களையும் இழந்து வெறும் மணலாக மாறுகிறது. 

Save Soil

நம்முடைய வணிக விவசாய நடைமுறைகள், பல ஆண்டுகளாக பாலைவனமாக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் அது மிக விரைவில் மிகப்பெரிய இயற்கை பேரழிவாக மாறும்.

மேலும் படிக்க | எடுத்த காட்சிகள் சரி இல்லாததால் மீண்டும் எடுக்கப்படும் 'பொன்னியின் செல்வன்?

பிறகு,  உணவை வளர்ப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். மண் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும், கிரகத்திற்கும் உயிர்வாழ மிக முக்கியமான ஒன்றாகும். 

 

இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், இந்த பெரிய நெருக்கடிக்கான நிலையையும், தீர்வுகளையும் பரப்ப உதவுவோம். இது இந்த கிரகத்தை காப்பாற்ற உதவுவது மட்டுமல்லாமல், அடிப்படையில் இதை நமக்காக செய்கிறோம். நமக்காகவும் நமது அடுத்த தலைமுறைக்காகவும் செய்கிறோம்” என பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார், மே 23 முதல் ஹெல்மெட் கட்டாயம்

மார்ச் 21ஆம் தேதி லண்டனில் இருந்து ‘மண் காப்போம்’ பயணத்தை தொடங்கிய சத்குரு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகளை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News