துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித்: பதக்க விவரம் இதோ

Actor Ajith Kumar: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் அணி மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 30, 2022, 06:25 PM IST
  • சினிமாவைத் தவிர இன்னும் பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் நடிகர் அஜித்.
  • திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பதக்கங்களை வென்றார்.
  • இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித்: பதக்க விவரம் இதோ title=

திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி நாளை நிறைவடைகிறது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் கடந்த 27-ந் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட அஜித்குமார் அன்று இரவே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். 

மேலும் படிக்க | விஜய், அஜித் தவறவிட்ட வாய்ப்பு! பயன்படுத்தி கொண்ட சூர்யா! 

இந்தநிலையில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஓய்வுபெற்ற டி.ஜி.பி.தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். 

இதில் மொத்தம் 162 பேர் பதக்கங்களை வென்றனர். இதில் நடிகர் அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ்.எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். தொடர்ந்து ரைபிள் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பரிசளிப்பு விழா நாளை நடக்கிறது.

மேலும் படிக்க | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் சிம்பு? 

Trending News