FirstLook: ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகும் ‘ஜாக்பாட்’!

ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ஜாக்பாட் என பெயரிடப்பட்டுள்ளது!

Last Updated : Apr 30, 2019, 10:03 PM IST
FirstLook: ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகும் ‘ஜாக்பாட்’! title=

ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ஜாக்பாட் என பெயரிடப்பட்டுள்ளது!

குலேபகாவலி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜாக்பாட். இத்திரைப்படத்தில் ரேவதி - ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இத்திரைப்படத்தின் முதல் பார்வை புகைப்படம் இன்று வெளியிடப்பட்ட நிலையில், இந்த புகைப்படத்தில் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக காட்சியளிக்கின்றனர். எனவே இத்திரைப்படத்தில் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கலாம் என தெரிகிறது.

இவர்களுடன் இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கின்றது., விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார். கடந்த பிப்ரவரி 10-ஆம் நாள் படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News