கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூரில் உள்ள மைதானம் ஒன்றில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள இடம் இருந்த நிலையில், 40 ஆயிரம் பேர் வரை கூடியுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருக்கைகளை மீறி டிக்கெட் விற்பனை செய்ததே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு ஏசிடிசி இயக்குநர் ஹேமந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ”செப்டம்பர் 10ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியை ஆர்கனைஸ் செய்தது நாங்கள் தான். இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஏ ஆர் ரகுமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த நிகழ்ச்சியில் நிறைய அசெளகரியங்கள் நடந்திருக்கின்றன. டிக்கெட் வாங்கி நிகழ்ச்சி உள்ளே வராமல் போனவர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு மன்னிக்கவும். அந்த டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை நான் திரும்பத் தருகிறேன். மக்கள் வந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியை மகிழ்ச்சியாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒரு சில கூட்டம் நெரிசல் காரணமாக டிக்கெட் எடுத்தும் உள்ளே வர முடியாமல் போனவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த அனைத்திற்கும் ஏசிடிசி முழுமையாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். இரண்டு நாட்களாக அவரை தாக்கி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். நடந்த அசோகரியங்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை தயவு செய்து தாக்காதீர்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நாங்கள் தான். போலியான டிக்கெட், கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த சம்பவம் நடந்தது. நாங்கள் அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யவில்லை. நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி வர முடியாமல் போன அனைவருக்கும் நாங்கள் பணத்தை திரும்பத் தருகிறோம்” என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத சம்பவம் செய்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசைக்கச்சேரி..!
முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கிழக்கு கடற்கரை சாலியில் உள்ள ஆதித்யா ராம் பாலஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிறக்கணக்கானோர் திரண்டனர். இதில் வெள்ளி, தங்கள், வைரம், பிளாட்டினம் என்ற வகைகளில் ரூபாய் 2,000 முதல் ரூபாய்.15,000 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ரத்து செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக வாங்கிய டிக்கெட்டுகளையே இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த டிக்கெட்டுகளுடன் உள்ளே சென்ற பல ஆயிரம் பேருக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள், ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் “எங்கள் வாழ்க்கையில் இந்த சம்பத்தை மறக்க முடியாது” என பாதிக்கப்பட்ட ரசிகர்கள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுயிருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ