வெற்றிமாறனின் விடுதலைக்காக உருவாகும் கிராமம்

விடுதலை படத்தையொட்டி திண்டுக்கல் அருகே கிராம செட் போடப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 22, 2022, 07:51 PM IST
  • விடுதலை படத்துக்காக உருவாகும் கிராம செட்
  • முழுவீச்சில் நடக்கும் விடுதலை ஷூட்டிங்
வெற்றிமாறனின் விடுதலைக்காக உருவாகும் கிராமம் title=

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் கடைசியாக இயக்கிய வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. நாவல்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் பாணியை வெற்றிமாறன் சமீபகாலமாக அதிகம் செய்துவருகிறார்.

அந்தவகையில் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து விடுதலை என்ற படத்தை அவர் இயக்கிவருகிறார். இதில் விஜய்சேதுபதில், சூரி,கௌதம் வாசுதேவ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Viduthalai

இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்தது. இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் அப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை சமீபத்தில் நடத்தினார்.

இதனால் விடுதலை படத்தின் ஷூட்டிங் தடைபட்டதாக பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதால் எப்போது முடியும் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருந்தது.

Viduthalai

இந்நிலையில், விடுதலை திரைப்படத்துக்காக திண்டுக்கல் அருகே சிறுமலையில் கிராம செட் ஒன்று போடப்பட்டுள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர். சிறுமலை பகுதியில் 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய யுவன் ஷங்கர் ராஜா!

முன்னதாக முழுவீச்சில் நடந்துவரும் ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News