சென்னை மெட்ரோ பாதைகளில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு!

சென்னை மெட்ரோ சார்பில், சென்னையில் நடைப்பெற்று வரும் சுரங்க ரெயில் பாதை பணியை நாளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்கிறார்!

Last Updated : May 13, 2018, 12:56 PM IST
சென்னை மெட்ரோ பாதைகளில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு! title=

சென்னை மெட்ரோ சார்பில், சென்னையில் நடைப்பெற்று வரும் சுரங்க ரெயில் பாதை பணியை நாளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்கிறார்!

இதன்படி காலை 10.30 மணியளவில் ஷெனாய் நகர்-நேரு பூங்கா 2-வது வழிப்பாதையை ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து நேரு பூங்கா- எழும்பூர்- சென்டிரல் இடையே நாளை மறுதினம் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த மாதம் இறுதியில் சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா இடையிலும், சின்னமலை - TMS இடையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது இதற்கான ஆயுத்தப்பணி நடைப்பெற்று வருகிறது.

முன்னதாக நேற்று சென்னைமலை – TMC மற்றும் செண்ட்ரல் – நேரு பூங்கா இடையே சோதனை ஓட்டம் திருப்திகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து நாளை ஷெனாய் நகர்-நேரு பூங்கா வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட உள்ளது. 

இந்த புது வழிபாதை மெட்ரோ பயணங்களால் தற்போது உள்ளதை விட 30% வரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Trending News