வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை: ஹெச்.ராஜா

வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என்று பாரதிய ஜனதா கட்சி செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Last Updated : Nov 19, 2017, 03:41 PM IST
வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை: ஹெச்.ராஜா title=

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 1992 முதல் 96 வரை அதிமுக அரசில் நடந்த முறைகேடுகளை மக்கள் மறக்க தயாராக இல்லை. சசிகலா குடும்த்தினர் கையில் அதிமுக சென்றுவிட கூடாது என்பதால் தான் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பார்கடலை கடையும் போது விசமும், அமுதமும் சேர்ந்துதான் வரும் அதைப் போன்று தான் சோதனையும். சோதனைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. ஆதரபூர்வமான தகவல் அடிப்படையில் தான் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு சசிகலா குடும்பத்தினர் கூட தகவலை தெரிவித்து இருக்கலாம்.

மேலும், 2ஜி வழக்கை போல், தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, டி.டி.வி.தினகரன் ஆபத்தில் இருப்பதால், அவரை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகம் உரிமை பறிபோகப் போவதாகவும், தமிழகம் ஆபத்தில் இருக்கிறது என்ற தவறான குற்றசாட்டை வைக்கிறார். 

உப்பு திண்டால் தண்ணீர் குடிக்க வேண்டும், தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆளுநர் ஆய்வு நடத்தியதாக கூறுவது தவறு, அதிகாரிகளிடம் ஆலோசனைகள் நடத்தினார் என்று தான் கூற வேண்டும்.

என்னுடைய கிராமத்தில் கழிப்பறை கட்டாமலே கட்டியதாக 2.1/2 லட்சம் ஊழல் நடந்தது, அதேபோன்று, வி.ஏ.ஓ வீட்டில் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச வேஸ்டி, சேலைகள் பதுக்கியது கண்டறியப்பட்டது. இது போல் தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை எச்சரிப்பதற்காகவும், கண்டிப்பதற்காகவே ஆளுநர் ஆலோசனை நடத்தினார் என்று ஹெச்.ராஜா கூறினார்.

Trending News