கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பாஜ கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகாவில் வாழும் பசவர் என்பவர் தோற்றுவித்த லிங்காயத் பிரிவினர் தங்களை வீர சைவர்கள் என்றுக் கூறிக்கொண்டு தனி வழிப்பாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். புத்த, சீக்கிய மதங்களை போல் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் வேண்டும் என நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதா காலமாக லிங்காயத் சமுதாயத்தினர் கர்நாடக அரசுடன் பேச்சுவாரத்தை நடத்தி வந்த நிலையில், லிங்காயத் சமூகத்தின் தனி மதம் கோரிக்கைக்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த ஒப்புதலை கர்நாடகா அமைச்சரவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
லிங்காயத் சமூகத்தின் தனிமத கோரிக்கையை அங்கீகரித்தது கர்நாடக அரசு
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பொது செயலாளர் முரளிதர் ராவ், ஓட்டுக்காக சித்தராமையா அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார் என கூறியுள்ளார்.
முரளிதர் ராவ் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
இந்தியாவில் எப்படி பிரிட்டிஸ்ர்காரர்கள் பிரித்து ஆளும் கொள்கையை மேற்கொண்டார்களோ, அதேபோல கர்நாடகா முதல்-அமைச்சர் சித்தராமையா மேற்கொள்கிறார். ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி நெருப்புடன் விளையாடுகிறார். தேர்தலுக்கு முன்னர் ஏன் காங்கிரஸ் இதைச் செய்ய நினைக்கிறது? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏன் அவர்கள் அதை செய்யவில்லை? என ட்விட் செய்துள்ளார்.
பாரதீய ஜனதா முதல் மந்திரி வேட்பாளரான எட்டியூரப்பா லிங்காயத் சமூகத்தினை சேர்ந்தவர். கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் பாஜகவுக்கு முதுகெலும்பாக உள்ளனர். தங்களுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தினரை திருப்பவே காங்கிரசின் கட்சி முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. கடந்த தேர்தலில் பாஜவுக்கு வலுவாக ஆதரவளித்த லிங்காயத் வாக்காளர்களை பிளவுபடுத்தவே காங்கிரசின் இதை கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் சுமார் 16% லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். அந்த மாநிலத்தில் 224 தொகுதிகளில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான தொகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர்.